Thursday, December 8, 2011

மத்திய கிழக்கு புரட்சி : ஒரு வருடக்கண்ணோட்டம்

மத்திய கிழக்கு புரட்சி  : ஒரு வருடக்கண்ணோட்டம்
(தொடர் 01 )

மத்திய கிழக்கு என்றால் எமது மனக்கண்ணில் தோன்றுவது பாலைவனங்களும் எண்ணையுமே. என்றாலும் அங்கே பல தசாப்தமாக ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அல்லது அவர்களின் குடும்பங்களும் நினைவுகளுக்கு வந்து செல்வதும் தவிர்கமுடியாததகும்.முபாரக், கட்டாபி, சதாம், அசாத், ஹுசைன், சவூத் குடும்பம் என்பன பிரபல்யமான பெயர்களாகும்.  ஜனநாயகம், மனித உரிமை, அரசியல் சுதந்திரம் இல்லை என்று மேற்கில் இருந்து குற்ற சாட்டுக்கள் எழும்பிய போதும் இவை அனைத்தும் வெறும் வெற்று கோசங்களாகவே இருந்தன.பிராந்திய  அரசியல் நலன்-எண்ணை-இஸ்ரேலின் இருப்பு என்பவற்றிக்கு குந்தகம் ஏற்படாதவரை ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும் இல்லை எனும்போது கொடுங்கோல் ஆட்சியாளர்களாக சித்தரிக்கப்பட்டு அவ்வாட்சியை அகற்றுவது  என்பது வாடிக்கையானது மாத்திரம் அல்ல இதனால் காலனித்துவ ஆட்சியின் பின்னரான மத்திய கிழக்கு ஒவ்வொரு தசாப்தமும் பெரும் போர்களை சந்தித்தது என்பது உண்மையாகும். ஆட்சியாளர்கள் பெரும்பாலும் மேற்கின் கைபொம்மையாக இருப்பது ஏன் எனில் தமது ஆட்சிக்குரிய  ஆபத்துஎப்போதுமே மேற்கில் இருநதேதானொலிய  தமது  மக்களால்இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே. மத்திய கிழக்கின் கடந்த நூற்றாண்டு வரலாறும் அதையே ஒப்புவிக்கின்றது. ஆனாலும் இவை அனைத்தும் 2010 இன் டிசம்பர் வரையாகும்.

2010  Dec  17 , துனிசியாவின் ஓர் வேலையில்லா ஏழை  பட்டதாரியான  முஹம்மது ப்வ்சுசி என்ற  மாணவனின் வீதியோர கடையை அகற்ற பொலிசாரின் முயற்சியை எதிர்த்து அம்மாணவன் தீ குளித்ததை அடுத்து அரபுலகமே தீ பற்றி எரிய ஆரம்பிக்கும்  என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாதுதான். ஏன் ப்வ்சுசி கூட தனது மரணத்தின் பின் பாரிய மாற்றம் ஒன்று நிகழப்போவதை உணர்ந்து இருக்க வாய்பில்லை. ப்வ்சுசியின்  மரணத்துடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர், Ben Ali யின் 23 வருட ஆட்சியை எதிர்க்க துணிந்தனர். இரு வார போராட்டத்தின் பின் குறைந்த உயிரிழப்புகளுடன் பென் அலியின் ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

இப்பொழுதும் அரபுலகின் மற்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்குரிய சவாலாக பார்க்கவில்லை. அதனாலேயே சவுதி அரேபியா பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்தது. திட்டமிட்டபடி2011 ஜனவரி மாதம் அரபுலக மாநாடு எகிப்தில் கடற்கரை நகரமான சாம் அல் சேகில் நடந்துகொண்டு இருக்கும்போதே காலித் சைட் என்ற இளைஜன் எகிப்தின் அளக்சான்ரியா நகரில் வைத்து போலிசாரின் அராஜகத்தால் கொல்லப்பட, வெடிக்கிறது பூகம்பம். இந்த முறை எதிர் பார்த்ததுபோல மக்கள் விதிக்கு வர, அவசர அவசரமாக மக்கள் நலன் திட்டங்களை அறிவித்து விட்டு கலைகிறது அரபுலக மாநாடு. அளக்சான்றியாவில் உருவாகிய புயல் கைரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் மையம் கொள்கிறது.  தனது போலீசாரை ஏவிவிட்டு போராட்டத்தை ஒடுக்க பார்த்தும் முடியவில்லை, பின் தனது கூலியாட்களை அனுப்பி தஹ்ரிரில் தங்கியிருந்த மக்களை விரட்டி பார்த்தும் முடியவில்லை. facebook , twitter  போன்ற சமூக இணைய தளங்கள் ஊடாக போராட்டம் விரிவடைய , ஆரம்பத்தில் நூற்றுகணக்கில் வர ஆரம்பித்த மக்கள், ஆயிரமாகி, லட்சமாகி, மில்லியன் கணக்கில் த்ஹ்ரிரில் ஒன்று கூடவும், இணைய தளங்களுக்கு தடை விதித்தும், மக்கள் அசைவதாக இல்லை. சந்தர்பத்தை பார்த்து மேற்கும் , தனது இராணுவமும் தன்னை கைவிட, இறுதியில் தனது 30 வருட ஆட்சியை  துறக்கிறார் முபாரக்.

ஆபத்தை உணர்ந்த  அரபு தலைவர்கள் மக்கள் நலன்களே முன்னுரிமை என்ற அளவில் பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்த போதும், ஜனநாயகம், அரசியல் சுதந்திரமே இப்போதைய தேவை என்ற அலை மத்திய கிழக்கு எங்கும் ஓங்கி வீச, டுநிசியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான லிபியாவில் ஆரம்பமாகிறது பிரச்சினை.

லிபியாவில் நடந்ததை பற்றி விரிவாக அடுத்த தொடரில் பார்போம்
                                           



5 comments:

  1. Congratz on yo 1st blog N My best wishes for yo future blogs..

    ReplyDelete
  2. இன்னும் விரிவாக எழுத தொடங்கினால் நலம் நண்பரே!

    "புரட்சி" என்பதே சரியான பதம். வழுக்களை களைய முயலுங்கள்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
    முடிந்தால் எனது வலைபூவிற்கும் வந்து செல்லுங்கள்

    http://www.sarhoon.com/

    ReplyDelete
  3. nice to c u i blog..... carry on...

    ReplyDelete