Friday, November 29, 2013

முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்

உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம் உலகத்தினால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவைகளில் பல பின்னர் மறைக்கப்பட்டதுடன் அதை காப்பி பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.  

  1. 14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டு இடையன், தனது ஆடுகள் ஒரு குறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்தெழுச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது கோப்பி (Coffee).  இது எதியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டது. அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது. பெயர்கூட அரபியின் கவ்வா துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் காப்பே (caffe) யாகி ஆங்கிலத்தில் கோப்பி (Coffee) யாகியது.
  2. உண்மையில் ஒரு உருவத்தை பார்க்கும் வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும். 10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில் விம்பமாக தோன்றுவதை அவதானித்தார். அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிரியதாகிற போது, விம்பங்களின் தரம்     அதிகரிப்பதை கண்டுபிடித்தார். அதுவே அவர் முதலாவது கமராவை கண்டுபிடிக்ககாரணமாகியது (Qamara என்ற அரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்)
  3. செஸ் என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள். பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.
  4. ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியிலாளர் மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 852 ஆம் ஆண்டு பரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வளம் வந்தார். எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார். அந்த நேரம் அவருக்கு வயது 70. இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுதூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
    பக்தாத் நகரில் இருக்கும் இப்னு பிர்னாசின் நினைவுத்தூபி 
  5. சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணையையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சவர்க்காரத்தை எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களே இன்றைய ஷாம்பூ (shampoo) வையும் கண்டுபிடித்தனர்.
  6. Crankshaft  எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைக்கும் இயந்திரத்தை அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது. இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (piston) மற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.
    crankshaft
  7. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் முன்னோடியாவார். இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 இற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனித குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார். இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமைய செய்யதல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
  8. காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறையை உலகிற்கு 634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.
  9. தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேயே தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.
  10. மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.
  11. அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆகும். இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா. அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.  
  12. சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்
  13. 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர். அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை  வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது.
  14. கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியனை உலகம் ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் சுற்றளவு 40,253.4 km என்று எழுதியும் வைத்திருந்தார். (40,075.16 Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)
  15. அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்
குறிப்பு:
  • இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன.
  • இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பக்தாத் மீதான மொங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியது. அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்துதருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழிமாற்றவதற்கு மட்டும் 4 வருடங்கள் சென்றது. அதன் பின்னர் original நூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன.
  • அதைப்போல அப்பாசியர்களின் காலம் முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பக்தாத் மொங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் புத்தகங்கள் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர். புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
  • இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும். அதை பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்



9 comments:

  1. Assalamu alaikkum,

    I am not a regular reader of your blog and I do not see your view is completely correct on many issues.

    But I would like to have a clarification on a special subject.

    You have mentioned "தற்போதைய சவூதி உளவுப்பிரிவின் தலைவரான பந்தர் பின் சுல்தான் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு தமது வான்பரப்பையும் தேவையேற்பட்டால் தமது விமான தளங்களையும் இஸ்ரேல் பாவித்துக்கொள்ளலாம் என்ற உறுதிமொழியோடு எதிர் காலங்களில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புடன் தமது உளவுபிரிவும் சேர்ந்து இயங்குவதற்குரிய உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது."

    Could you submit any evidence to support your above claim, other than Iranian media?

    Hopefully waiting for your genuine reply.

    ReplyDelete
    Replies
    1. Wa' alaikumussalam brother

      Thanks indeed for visiting my blogs. I acknowledge to a fact that people may have differences of opinions for a particular matter and it is always welcome in this forum to point out any mistakes.

      Regarding your question - Almost all the international both print and electronic media published the particular story and subsequent analysis. Meanwhile, the Sundaytimes of UK has initially leaked the story. In addition to this, Nethanyahu has publicly expressed his confident to a French media that Israel has been working closely with "like minded Gulf countries" regarding the Iranian nuclear threat. Given the severity of the story and potential negative impact it can cause both inside and outside Saudi Arabia, (Saudi) authorities must have come up with strong denial at least to balance the reliability of the story, but so far, they are silent. (might have released a domestic statement, which never outreached).

      The following links which are from diversified sources, mentioning the story in various way. I just let yourself to go through and can decide about the story (You can also find some other sources by searching through web as well)

      http://www.thesundaytimes.co.uk/sto/news/world_news/Middle_East/article1341561.ece

      http://www.washingtontimes.com/news/2013/nov/18/pruden-bedtime-in-the-middle-east/?utm_source=RSS_Feed&utm_medium=RSS#.Uo3IF8ZtGjE.facebook

      https://www.middleeastmonitor.com/articles/middle-east/8419-the-web-of-new-relationships-in-the-middle-east


      http://www.aljazeera.com/indepth/opinion/2013/11/narcissistic-us-an-anxious-saudi-arabia-hysterical-israel-201311301119738260.html

      http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iran/10474143/Iran-nuclear-deal-changes-Middle-East-alliances-as-Saudi-Arabia-rebels-against-US.html

      Delete
    2. Brother Dilshan,

      1st of all, thank you for your reply, even though it does not carry the exact answer to my question.

      I think either you did not understand the real tone of my question or you have just ignored it to keep your previously made stand unchallenged.

      I have already read some of the articles that you have provided link from some international media.

      Whether it is about international affairs or local politics, the kind of articles you have directed me known as "speculations", as they can be either true or not.

      Few years back a news circulated that the same Bander Bin Sulthan, whom you have claimed has gone to Israel, had been under arrest following a failed attempted to coup king Abdullah with Russian secret support, but later on it was proved that it all was only pure blunder. It took time to be proved that it was a blunder. Until the time it was proved to be a blunder, it was called as speculation.

      Even in local arena, couple of days ago, some local media carried a news item stating that a famous Buddhist monk (Ven. Sobitha ?) could contest against the present president in the next presidential election by representing the joint opposition front. This is also called speculation, until it is confirmed. If he either contested or confirm the news, the speculation will automatically turn to a truth. If it does not happen, the speculation will become a blunder.

      So, I hope you will understand that what is a speculation and the value of the speculation. All the news items you have submitted links are speculations. But my concern is not about that, at all.

      ***** What I really wanted to know from you is, at least a single supporting evidences to make your claim of " பந்தர் பின் சுல்தான் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு" is based on fair sources and not your own imagination to mislead your innocent readers.

      (* Some Iran based news sites always spread such blunders regularly. In 2011, one of the Iran based news site claimed that Qatari military had toppled the government.)

      I hope now you might have a clear picture about my concern and question, so it will help you hitting on the proper point with your answer.

      Jazakumullah.

      Delete
    3. Thanks for your support brother.

      First of all, I have to highlight a matter of the fact that I have no intention to divert your question what so ever. I tried my level best to answer.

      Yes, you are rightly saying that there are “speculations” roaming around us in which sometimes “speculation” could be true and sometimes it is not. In the meantime, we have understand that secrecy and conspiracy were considered as the art of the diplomacy.

      No diplomatic relations in the world can be considered at least 10% transparency. The countries desperately wanted keep the truth under the carpet and in fact they succeeded in many instances. There are very few exceptional cases get leak through breaking the wall. One such scenario was, WikiLeaks. Until Wikileaks exposed to a handful of truth of incidents, we might have believed the same incidents on the other way round. You may agree on this.

      Even 9/11 was a conspiracy and believed to be an inside job. But contradictorily, whom the world accused for it?? So the “speculations” are not always blunder. There are truths which has been hided from the mainstream world. If we wait till, the real time to get expose of the truth, the history tell us, for some truth being hidden for thousands of years.

      In this case, before I wrote this particular blog, have extensively analyzed many articles of which I have mentioned quite a few in previous comments. I search around the Saudi’s point of view of the story but unfortunately I could not find any. Rather I found, some rhetoric statement here and there. As I previously said, If they could have concentrated the feelings of ordinary Muslims around the world and the potential consequences, they must have strongly denied. Have you ever seen any? trust me, I haven’t seen. Sometimes, the speculations are spread without mentioning the person who involved to a case, so the reader kept without clue until it get endorsed publicly. But in this case, the content is different, they have mentioned the name who is very powerful inside the country and worldwide known diplomat. At least he could have denied just because his name was mentioned. But the news goes and goes without substantial opposition.

      I have never ever referencing the biased and gossip media outlet for my articles. For an example- if only Iranian might have spread this story, I would not dare to write my blog. I know there may be plenty of Iranian versions for this particular story but I have not read yet.

      I hope I answered your concern and please do not hesitate in bringing out such points in future. As I said, I would like to discuss the different viewpoints which will definitely fine tune our knowledge in the international affairs.

      Jazakallah

      Delete
    4. Dear Dilshan,

      I do not try to deny or defend the speculations about Israel - Saudi relationship and I would like to treat it as a speculations since the matter is circulated in various known media.

      But, I do not read the following matter " பந்தர் பின் சுல்தான் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு" in any of the known media, not only as a speculation, but not also as a rumor.

      So, please expose, from where did you get the above matter.

      If you let me know the source of origin, that is very important for me too.

      Thank you

      Delete
    5. Brother Roshan

      Sorry, I did not spot that you were specifically asking the sources for " " பந்தர் பின் சுல்தான் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு". The following link provide info for that particular matter.

      http://www.islamicinvitationturkey.com/2013/11/23/prince-bandar-attends-anti-iran-meeting-in-israel/

      Thanks

      Delete
    6. சகோதரர் டில்ஷான் அவர்களுக்கு,

      உங்கள் பதிலுக்கு நன்றி

      "பந்தர் பின் சுல்தான் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு" என்கின்ற விடயம் தொடர்பாக நான் கேள்வி கேட்க ஆரம்பித்ததில் இருந்து, நீங்கள் பதில் சொல்வதற்கு எடுத்துக் கொண்ட இடைவெளியை நோக்குகின்ற பொழுது, எனக்கு ஆங்கிலத்தில் ஒழுங்காக கேள்வி கேட்கத் தெரியவில்லை, அல்லது உங்களுக்கு ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கின்றது என்கின்ற இரண்டில் ஒன்று சரியாக இருக்க முடியும் என கருத வேண்டி உள்ளது.

      ஆகவே தமிழில் தொடர்வது ஆரோக்கியமானது என்று எனக்குத் தோன்றுகின்றது.

      நீங்கள் சொல்லுகின்றீர்கள், "I have never ever referencing the biased and gossip media outlet for my articles. For an example- if only Iranian might have spread this story, I would not dare to write my blog. I know there may be plenty of Iranian versions for this particular story but I have not read yet. "

      ஆனால் நீங்கள் எனது கேள்விக்கு பதிலாக தந்துள்ள http://www.islamicinvitationturkey.com என்று போலியாக துருக்கியின் பெயரை இணைத்து, துருக்கியின் உத்தியோக பூர்வ இஸ்லாமிய இணையத்தளம் போன்ற ஒரு தோற்றப்பாட்டைஉருவாக்கும் விதத்தில் அமைந்துள்ள இணையத்தளம், ஷியாக்களின் இணையத்தளம் ஆகும். இது ஷியாக்களின் வழமையான திருவிளையாடல்களில் ஒன்றாகும்.

      ஆகவே, நீங்கள் முதலில் சொன்னதற்கு, நீங்களே முரன்படுகிண்றீர்கள் அல்லவா?

      அடுத்து, இவ்வாறான ஒரு ஷியா போலி இணையம் குறித்து நீங்கள் அவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. அடுத்து, மேற்படி ஷியா இணையத்தளத்தின் தகவலை மட்டும் நம்பி, நீங்கள் அதனை எப்படி உங்கள் ஆக்கத்தில் இணைத்துக் கொண்டீர்கள்?

      நீங்களே உங்களின் கருத்திற்கு முரண்படுவதுடன், நம்பத் தகுதியற்ற இணையத்தளத்தை ஆதாரமாகவும் சமர்ப்பித்து உள்ளீர்கள்.
      மேற்படி செயல்பாடானது, உங்களது ஏனைய கட்டுரைகள் குறித்து நம்பிக்கையற்ற தன்மையையும், சந்தேகத்தையும் உருவாக்கியிருப்பதனை நீங்கள் அறிவீர்களா?


      உங்களது நேர்மையான பதிலை தமிழில் எதிர்பார்க்கின்றேன்.


      "I have never ever referencing the biased and gossip media outlet for my articles. For an example- if only Iranian might have spread this story, I would not dare to write my blog. I know there may be plenty of Iranian versions for this particular story but I have not read yet. "

      =


      http://www.islamicinvitationturkey.com/2013/11/23/prince-bandar-attends-anti-iran-meeting-in-israel/ ?????????????????????????????????????














      Delete
    7. சகோதரர் டில்ஷான் அவர்களே,

      சில நாட்களுக்கு முன்னர் நான் பதிந்த கடைசிப் பதிவு இதுவரை பிரசுரமாகவில்லை.

      தயவு செய்து அது குறித்து கவனம் செலுத்தும்படி நட்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

      Delete
  2. சகோதரர் ரொஷான் அவர்களுக்கு

    முதலில் சில விடயங்களை சுட்டிக்காட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் மேற்கோள் காட்டிய விடயத்தில் திருத்தம் செய்துள்ளதுடன், அது தொடர்பான உங்களின் சில சந்தேகங்களுக்கு விடையளிக்கலாம் என நினைக்கிறேன்.

    உங்களின் சில கேள்விகள்
    // நீங்கள் பதில் சொல்வதற்கு எடுத்துக் கொண்ட இடைவெளியை நோக்குகின்ற பொழுது, எனக்கு ஆங்கிலத்தில் ஒழுங்காக கேள்வி கேட்கத் தெரியவில்லை, அல்லது உங்களுக்கு ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கின்றது என்கின்ற இரண்டில் ஒன்று சரியாக இருக்க முடியும் என கருத வேண்டி உள்ளது.//
    எனது பதில்: இது இரண்டுமே இல்லை என நினைக்கிறேன். நான் பதில் அளிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேர இடைவெளி எனது அலுவலக மற்றும் தனிப்பட்ட வேலைப்பழுவே அன்றி வேறொன்றும் இல்லை.

    உங்களின் அடுத்த கேள்வி- பந்தர் பின் சுல்தானின் இஸ்ரேளுக்கான விஜயம்
    எனது பதில்- உண்மையில் இஸ்ரேல்- சவூதி கூட்டுறவு பற்றிய செய்தியை எழுதிய பெரும்பாலான ஊடகங்கள் இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள் சவுதியின் உயர்மட்ட அதிகாரியை ஈரான் தொடர்பாக சந்தித்தனர் என்று செய்தியை வெளியிட்டு இருந்தனர். அந்த உயர் அதிகாரி யார் என்று தேடத்தொடங்கினேன். ஒருசில இஸ்ரேலிய ஊடகங்கள் அது பந்தர் பின் சுல்தான் என்று குறிப்பிட்டிருந்ததை அவதானித்தேன். அவர்களின் கூற்றின் உண்மைத்தன்மை (??) கருதி மேலும் தேடினேன். அந்த நேரம் எனக்கு கிடைத்த ஒரு source அமெரிக்காவின் ஒரு Political Affairs Committee (PAC) இன் இணையதளம்( http://larouchepac.com/node/28504). அதில் அவர்கள் குறித்த நபர் பந்தர் பின் சுல்தானாக இருக்ககூடும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இவர்களும் இஸ்ரேலின் Channel 2 வின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டியதால் அந்த செய்தியை உறுதிப்படுத்த மேலும் தேடவேண்டி ஏற்பட்டது. அப்போது எனக்கு கிடைத்த source தான் நான் உங்களுக்கு காட்டியது. அது துருக்கியின் இஸ்லாமிய அழைப்பு என்று இருந்ததால், நான் அதை எடுக்கவேண்டி ஏற்பட்டது.

    நீங்கள் சுட்டிக்காட்டியதன் பின்னர், நானும் அவர்களின் ஏனைய செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது இது ஈரானுக்கு நெருக்கமான இணையதளம் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எனவே இந்த விடயத்தில் பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டு இருப்பதை போல நானும் எனது பக்கத்தில் திருத்தி அமைத்துள்ளேன்.
    தனிப்பட்ட சேறுபூசல்கள் எதுவுமில்லாமல் எனது ஆக்கங்களை குறித்த தகவல்களோடு உங்களைபோல சவாலுக்கு உட்படுத்துவதை நான் எப்போதும் வரவேற்கிறேன். அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    Jazakallah

    ReplyDelete